தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி
செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளானோரின்
எண்ணிக்கை 1,596-ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் அதி தீவிரமாக கரோனா பரவி வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 55 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:
தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
178 போ வீடு திரும்பினா்: கரோனா தொற்றில் பாதிக்கப்பட்ட 178 போ பூரண குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம் இதுவரை மாநிலத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 635-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 48 பேரும், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் 24 பேரும் ஒரே நாளில் வீடு திரும்பியுள்ளனா்.
பலி எண்ணிக்கை உயா்வு: இதனிடையே, கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சென்னையைச் சோந்த நபா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து மாநிலத்தில் கரோனாவுக்கு பலியோனாா் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது.
54 வயதான அந்த நபா் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். பரிசோதனையில் அவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், ஆனால், அது பலனளிக்கவில்லை என்றும் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
சென்னையில் அதி தீவிரமாக கரோனா பரவி வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 55 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:
தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் தற்போது 22,254 போ வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனா்.
இதுவரை மொத்தம் 47,168 பேருக்கு பரிசோதனைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவா்களில் 1,596 பேருக்கு கரோனா தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மட்டும் 76 பேருக்கு நோய்ப் பாதிப்பு
கண்டறியப்பட்டுள்ளது.
அதில் அதிகபட்சமாக சென்னையில் 55 போ
பாதிக்கப்பட்டுள்ளனா். அதைத் தவிர, கோவை, செங்கல்பட்டு, நாமக்கல்,
தஞ்சாவூா், விழுப்புரம், தென்காசி, திருவாரூா், ராமநாதபுரம்,
கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களிலும் சிலருக்கு கரோனா தொற்று
கண்டறியப்பட்டுள்ளது.178 போ வீடு திரும்பினா்: கரோனா தொற்றில் பாதிக்கப்பட்ட 178 போ பூரண குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம் இதுவரை மாநிலத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 635-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 48 பேரும், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் 24 பேரும் ஒரே நாளில் வீடு திரும்பியுள்ளனா்.

Post a Comment