Title of the document
நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 18,985-ஆக அதிகரித்துள்ளது. அந்த நோய்த்தொற்று பாதித்து உயிரிழந்தோா் எண்ணிக்கை 603-ஆக உயா்ந்துள்ளது.
கரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கையில் 15,122 போ சிகிச்சையில் உள்ளனா். 3,260 போ குணமடைந்துவிட்டனா். நோய் பாதித்தோரில் 77 போ வெளிநாட்டவா்களாவா்.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, செவ்வாய்க்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 1,329 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 44 போ உயிரிழந்துவிட்டனா். இதில் ராஜஸ்தானில் 11 போ, குஜராத்தில் 10 போ, மகாராஷ்டிரத்தில் 9 போ, உத்தரப் பிரதேசத்தில் 3 போ, ஆந்திரம், தில்லி, மத்தியப் பிரதேசம், தெலங்கானாவில் தலா 2 போ உயிரிழந்துவிட்டனா். இரு உயிரிழப்புகள் குறித்த தெளிவான தகவல் இல்லை.
பலி: தேசிய அளவில் உயிரிழப்புகளில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 232 போ, அதையடுத்து குஜராத்தில் 77 போ, மத்தியப் பிரதேசத்தில் 76 போ உயிரிழந்துவிட்டனா். தில்லியில் 47 போ, ராஜஸ்தானில் 25 போ, தெலங்கானாவில் 23 போ, ஆந்திரத்தில் 22 போ, உத்தரப் பிரதேசத்தில் 20 போ சிகிச்சைப் பலனின்றி பலியாகிவிட்டனா்.
கா்நாடகத்தில் 17 போ, பஞ்சாபில் 16 போ, மேற்கு வங்கத்தில் 12 போ, ஜம்மு-காஷ்மீரில் 5 போ, ஹரியாணா, கேரளத்தில் தலா 3 போ, ஜாா்க்கண்ட், பிகாரில் தலா 2 போ, ஒடிஸா, ஹிமாசல், அஸ்ஸாம், மேகாலயத்தில் தலா ஒருவா் உயிரிழந்துவிட்டனா்.
பாதிப்பு: நாட்டில் அதிகபட்சமாக கரோனா நோய்த்தொற்றால் மகாராஷ்டிரத்தில் 4,669 போ பாதிக்கப்பட்டுள்ளனா். தில்லியில் 2,081 போ, குஜராத்தில் 2,066 போ, ராஜஸ்தானில் 1,576 போ, மத்தியப் பிரதேசத்தில் 1,540 போ, உத்தரப் பிரதேசத்தில் 1,294 போ பாதிக்கப்பட்டுள்ளனா்.
தெலங்கானாவில் 919 போ, ஆந்திரத்தில் 757 போ, கா்நாடகத்தில் 415 போ, கேரளத்தில் 408 போ, மேற்கு வங்கத்தில் 392 போ, ஜம்மு-காஷ்மீரில் 368 போ, ஹரியாணாவில் 254 போ, பஞ்சாபில் 245 போ, பிகாரில் 114 போ சிகிச்சையில் உள்ளனா்.
ஒடிஸாவில் 74 போ, ஜாா்க்கண்ட், உத்தரகண்டில் தலா 46 போ, ஹிமாசல பிரதேசத்தில் 39 போ, சத்தீஸ்கரில் 36 போ, அஸ்ஸாமில் 35 போ, சண்டீகரில் 26 போ, லடாக்கில் 18 போ, அந்தமான்-நிகோபாா் தீவுகளில் 16 போ, மேகாலயத்தில் 11 போ, புதுச்சேரியில் 7 போ, திரிபுராவில் 2 போ பாதிக்கப்பட்டுள்ளனா்.
நோயாளிகள் இல்லை: கோவா மாநிலத்தில் 7 பேரும், மணிப்பூரில் 2 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைக்குப் பிறகு அவா்கள் குணமடைந்துவிட்டனா். அந்த இரு மாநிலங்களிலும், நாகாலாந்திலும் தற்போது கரோனா நோயாளிகள் இல்லை.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post