தாய் இறப்பு; ஆயுதப்படை வீரரின் 1,100 கி.மீ., பயணம்

Join Our KalviNews Telegram Group - Click Here
உ.பி.,யை சேர்ந்த ஆயுதப்படை வீரர் ஒருவர், தாய் இறந்ததால், 1,100 கி.மீ., பயணம் செய்து சொந்த ஊர் அடைந்துள்ளார்.கொரோனாவை கட்டுப்படுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தாய் இறந்ததால், ஆயுதப்படை வீரர் ஒருவர், 1,100 கி.மீ., பயணம் செய்து சொந்த ஊர் அடைந்துள்ளார்.உ.பி.,யின் சிகார் கிராமத்தை சேர்ந்த, சந்தோஷ் யாதவ், 30, சத்தீஸ்கரில் நக்சலைட்கள் அமைப்பினர் அதிகமுள்ள பிஜாப்பூர் மாவட்டத்தில், ஆயுதப்படை வீரராக பணியாற்றி வருகிறார். இவரது தாயார் இறந்த தகவல், 5ம் தேதி கிடைத்ததும், சரக்கு ரயில், லாரிகள், படகு என, 1,100 கி.மீ., துாரத்தை, மூன்று நாட்களில் கடந்து, சொந்த ஊர் வந்தடைந்தார்
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்