Title of the document
ஹால்டிக்கெட் விவகாரம்:

images%2528118%2529

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் 10 லட்சம் மாணவர்களின் குழப்பம் தீர்ந்தது

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை சுமார் 10 லட்சம் மாணவர்கள்  எழுத உள்ளனர்.

இத்தேர்வு வரும் 27-ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

 இந்நிலையில் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை  பள்ளிகளில் டவுன்லோட் செய்யப்பட்டது.

 அப்போது தேதி வாரியாக தேர்வுகள் வெளியிடப்படாமல் பாடம் வாரியாக தேர்வுகள் வெளியிடப்பட்டிருந்தது தெரியவந்தது.

கடைசியில் எழுத வேண்டிய கணிதத் தேர்வின் தேதி நடுவில் இடம்பெற்றிருந்தது.

 இதனால் மாணவர்களும், ஆசிரியர்களும் பெரும் குழப்பத்துக்கு உள்ளாகினர்.

 இதுபற்றி  தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் (நிறுவனத் தலைவர் டாக்டர் அ.மாயவன் அவர்கள் எக்ஸ்எம்எல் சி) மாநில சட்ட செயலாளர் சாமி அவர்களுக்கு தெரியவந்தது.

 இதையடுத்து அவர் உடனடியாக கழகத்தின் மாநிலத் தலைவர் எஸ். பக்தவச்சலம் அவர்களிடம் தகவல்   தெரிவித்தார்.

 இதைத்தொடர்ந்து மாநில தலைவர் எஸ்.பகதவச்சலம்  அவர்கள் மரியாதைக்குரிய தேர்வுத்துறை இயக்குனர் அவர்கள் மரியாதைக்குரிய இணை இயக்குனர் ஆகியோரிடம் வியாழக்கிழமை முறையிட்டார்.

 இதை உடனடியாக மாற்றித் தருவதாக  அவர்கள் உறுதி அளித்தனர்.

 அதன்படி  தேதி வாரியாக தேர்வுகள் இன்று வெளியிடப்பட்டு ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

 இதனால் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத இருந்த 10 லட்சம் மாணவர்களின் குழப்பத்தை தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் தீர்த்து வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post