06.01.2020 திங்கள் - 2 மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு!

Join Our KalviNews Telegram Group - Click Here
 local holiday

முத்துப்பேட்டை தர்கா சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு ஜன.6-ல் திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜன. 6-ல் கருவூலங்கள், சார்நிலை கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளர்களுடன் செயல்படும். ஜன. 6-ம் தேதிக்கு பதில் திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் ஜன. 25-ல் செயல்படும்  எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 6 ம் தேதி திருச்சியில் உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் சிவராசு அறிவித்துள்ளார். ஜன.,6 ம் தேதிக்கு பதிலாக ஜன.,25 வேலை நாளாக எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அவற் தெரிவித்துள்ளார்.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்