5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறுமா..? - அமைச்சர் பதில்

Join Our KalviNews Telegram Group - Click Here


திட்டமிட்டபடி இந்த ஆண்டு 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடப்பாண்டு 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

மாணவர்களின் திறனை மேம்படுத்தவே இந்த பொதுத்தேர்வு முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் செயல்படுத்தினால் மட்டுமே அதுகுறித்த முழுமையான விவரங்கள் கிடைக்கும் என்பதால் இந்த ஆண்டு நிச்சயம் பொது தேர்வு நடைபெறும் என செங்கோட்டையன் கூறியுள்ளார்.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்