Title of the document


நாடு முழுவதும் நேற்று நடந்த, மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில், 25 லட்சம் பேர் பங்கேற்றனர்.மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் உள்ள பள்ளிகள், இந்திய பாதுகாப்பு துறை நடத்தும் சைனிக் பள்ளிகள், நவோதயா பள்ளிகள் மற்றும் இந்த பாடத் திட்டத்தில் இணைந்த தனியார் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, மத்திய அரசின் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஒவ்வோர் ஆண்டும், சி.பி.எஸ்.இ., வாரியம் சார்பில், இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

அதன்படி, நேற்று நாடு முழுவதும், ஆசிரியர் தகுதி தேர்வு நடந்தது. நாடு முழுவதும், 110 நகரங்களில், 2,935 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது.தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் மொபைல் போன் இயங்காத வகையில், ஜாமர் வசதிகளுடன் தேர்வு நடத்தப்பட்டது. விண்ணப்பித்த, 28.32 லட்சம் பேரில், 25லட்சம் பேருக்கு மேல், தேர்வில் பங்கேற்றனர்.

மொத்தம், 150 மதிப்பெண்களுக்கு அமைக்கப்பட்ட வினாத்தாள் எளிதாக இருந்ததாக, பெரும்பாலான பட்டதாரிகள் தெரிவித்தனர். கணித பகுதி கொஞ்சம் கடினமாக இருந்ததாகவும் சிலர் கூறினர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post