Title of the document
கன்னியாகுமரி மாவட்டம், புத்தேரியைச் சேர்ந்த லலிதா பாய், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:இடைநிலை ஆசிரியராக கடந்த 1971ல் நியமிக்கப்பட்டேன்.


 எனது பணி வரன்முறை செய்யப்பட்டு 73ல் தகுதி காண் பருவத்தை முடித்தேன். கடந்த 1981ல் தேர்வு நிலை, 1991ல் சிறப்பு நிலையும் வழங்கப்பட்டது. 21.8.1996ல் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியமர்த்தப்பட்டேன்.


அப்போது முதல் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான ஊதியம் பெற்று வருகிறேன். உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றியவர்களுக்கு, இடைநிலை தரத்தில் தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை தகுதி வழங்கப்பட்டது.


அப்போது முதல், துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை வழங்கப்பட்டு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டு, ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்கள் வழங்கப்படுகிறது.

ஆனால், துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்ற பலருக்கு இதுபோன்று பணப்பலன்கள் வழங்கப்படவில்லை.


எனவே, துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றியவர்களில் இடைநிலை ஆசிரியர் தரத்தில் தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை தகுதி பெற்ற நாள் முதல் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை ஊதியம் நிர்ணயம் செய்து பணப்பலன்களை வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.


இதேபோல் மேலும் பலர் மனு செய்திருந்தனர். இந்த மனுக்களை நீதிபதி வி.எம்.வேலுமணி விசாரித்தார். இதையடுத்து நீதிபதி, ''மனுதாரர்கள் தங்களது கோரிக்கை குறித்து பள்ளி கல்வித்துறை செயலருக்கு 2 வாரத்திற்குள் புதிதாக மனு அளிக்க வேண்டும்.


அந்த மனுவை பள்ளி கல்வித்துறை தகுதி, முன்னுரிமை மற்றும் முந்தைய வழக்குகளின் தீர்ப்புகள் அடிப்படையில் 16 வாரத்திற்குள் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டது. # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post