Title of the document
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 10.10.2019 அன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தமிழ் தெரியாதவர்கள் கூட தேர்வில் வெற்றி பெறுவதால் பொது ஆங்கிலம் மற்றும் பொது தமிழ் நீக்கி முதல்நிலை தேர்வில் தமிழ் மற்றும் கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் தரும் வகையில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கபடுகிறது என்று தெரிவித்து இருந்தது.

21.10.2019 அன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் நபர்கள் மொழி திறன் உள்ளவர்களாகவும் கோப்புகள் வரைவு செய்யும் திறன் உள்ளவர்களாக வேண்டும் என பல்வேறு துறை செயலாளர்கள் கோரிக்கை விடுத்ததின் பேரில் பல நிபுணர்களை கொண்டே பாடத்திட்டத்தில் மொழிபெயர்ப்பும் சுருக்கி வரைதல் போன்ற பகுதிகளும் சேர்க்கப்பட்டன என்று தெரிவித்தது.

ஏற்கனவே வெளியிட்ட தேர்வு திட்டத்தில் மொழிபெயர்ப்பு பகுதியில் மதிப்பெண்களை சேர்ப்போம் என்றும் பின்னர் சேர்க்க மாட்டோம் என்றும் அந்தர் பல்டி அடித்தது. தேர்வர்கள் பாடத்திட்டத்தை என்னவென்று புரிந்துகொள்ளும் சமயத்தில் உடனே அடுத்து குழப்பத்தை ஏற்படுத்தி கொண்டே வந்தது.

தற்போது கருத்துரு என்ற பெயரில் அடுத்த குழப்பம்... அனேகமாக 99% பேர் பழைய பாடத்திட்டத்தையே தொடர வேண்டும் என்று உள்ளீடு செய்வார்கள்.. அதை அப்படியே கருத்தில் கொண்டு பழைய பாடத்திட்டத்தயே நடைமுறைக்கு கொண்டு வந்தால் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .

தேர்வாணையம் 2013 ஆம் ஆண்டில் இருந்தே குருப் இரண்டு விவகாரத்தில் தடுமாறி வருகிறது...
2014 ல் நடந்த குருப் இரண்டு தேர்வில் மெயின்ஸ் அறிமுகம்.

Essay (Paper Format)+ 100 GK – ONLINE EXAM ( தேர்வுமுறை எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை)
2016 ல் நடந்த குருப் இரண்டு தேர்வில் மெயின் தேர்வு மீண்டும் எழுதும் முறையே அறிமுகம்.

2018 ல் நடந்த குருப் இரண்டு மெயின் தேர்வில் கேள்வித்தாளும் பதில் எழுதும் பகுதியும் ஒரே புத்தக தொகுப்பாக அறிமுகம்
தற்போது மெயின் தேர்வு முறையே மாற்றம் ...

ஆக ஒவ்வொரு குருப் இரண்டு தேர்வையும் எதையோ மாற்ற முயற்சி செய்து கொண்டே இருப்பதால் நிலையாக தேர்வர்கள் படிக்க முடியாமல் போவது மட்டும் தெளிவாகிறது ...
ஏன் இவ்வளவு தடுமாற்றம் ??? பழைய பாடத்திட்டத்தை கொண்டு வந்தால் மீண்டும் தமிழே தெரியாதவர்கள் தேர்வு எழுத முடியும் என்ற குற்றசாட்டு என்ன ஆகும் ? துறைசார் செயலாளர்களின் பல ஆண்டு கோரிக்கை என்னவாகும்?


ஆக பல குழப்பங்களில் சிக்கி தவிக்கிறது தேர்வாணையம் ...
அரசு பணிக்கு என்ன தகுதி தேவையோ அதை சரியாக மதிப்பீடு செய்து தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்வை நடத்தினாலே போதுமே ... ஆணையத்தின் நோக்கம் நிறைவேறும்.

குழப்பம் நீங்கி விரைவில் தெளிவான அறிவிக்கை வெளியிட்டால் சரி.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post