ஆசிரியர்கள் பான் கார்டு விபரம் சேகரிப்பு

Join Our KalviNews Telegram Group - Click Here
ஆசிரியர்களின் வங்கி கணக்கு மற்றும் பான் கார்டு விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு பணியில் உள்ள ஆசிரியர்களின் விபரங்களை &'எமிஸ்&' என்ற கல்வி மேலாண்மை இணையதளத்தில் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. ஆசிரியர்களின் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் பதிவு செய்யப்பட்டு அதன்படியே இடமாறுதல் கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் ஆசிரியர்களின் வங்கி கணக்கு எண் மற்றும் பான் கார்டு விபரங்களை எமிஸ் இணையதளத்தில் உடனடியாக பதிவு செய்யுமாறு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதனால் ஆசிரியர்களின் வங்கி கணக்கு விபரங்கள் மற்றும் வருமானம் ஆகியவை கல்வி துறையின் கண்காணிப்பு வளையத்தில் வர உள்ளன.
🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்