Title of the document
வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து தமிழகத்தில் 13,605 பள்ளிகளில் தேர்தல் கல்வியறிவு மன்றம் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ தெரிவித்தார்.

மதுரையில் ஒன்பதுமாவட்டங்களின் துணைகலெக்டர்கள், பி.டி.ஓ.,க் கள், சி.இ.ஓ.,க்கள், டி.இ.ஓ.,க்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான தேர்தல் கல்வியறிவு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

இதில் பங்கேற்ற சத்தியபிரதா சாஹூ நிருபர்களிடம் கூறியதாவது:
வாக்களிப்பது மற்றும் ஓட்டுச்சாவடிகளின் நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 13,605 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் தேர்தல் கல்வியறிவு மன்றம் துவக்கி வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவர், பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 

இதனால் 5 சதவீதம் ஓட்டுப்பதிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழக தேர்தல் ஆணையம் கேட்கும் பட்சத்தில் தேவைப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட ஒருசில சுயேச்சைகள் மட்டுமே கணக்கு தாக்கல் செய்யவில்லை.

 தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள் அனைவருக்கும் உடன் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இணை தலைமை தேர்தல் அதிகாரி மணிகண்டன், மதுரை கலெக்டர் வினய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post