Title of the document


தமிழக பள்ளி கல்வித்துறையின் கீழ், 600க்கும் மேற்பட்ட ஆசிரியர் கல்விக்கான பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றில், இரண்டு ஆண்டு, டி.எல்.எட்., எனப்படும், ஆசிரியர் பயிற்சி படிப்புகள் நடத்தப் படுகின்றன.பிளஸ் 2 முடித்தவர்கள், ஆசிரியர் பயிற்சி படிப்பை படிக்கலாம். இதை முடித்தால், ஆசிரியர் தகுதிக்கான, &'டெட்&' தேர்வில் தேர்ச்சி பெற்று, தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியில் சேரலாம். 10 ஆண்டுகளுக்கு முன் வரை, ஆசிரியர் பயிற்சி படிப்பில், லட்சக்கணக்கில் மாணவர்கள் சேர்ந்தனர்.சமீபகாலமாக, இந்த எண்ணிக்கை சரிந்துள்ளது. கடந்த கல்வி ஆண்டில், 4,000 பேர் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் படித்தனர். அவர்களுக்கான தேர்வு முடிவுகள், சமீபத்தில் வெளியாகின.

இதில், மொத்தம், 100 மதிப்பெண்களுக்கு, 50 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அரசு தேர்வுத்துறை நடத்திய இந்த தேர்வை, 4,000 பேர் எழுதியதில், 2.5 சதவீதமான, 105 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த விபரங்கள், பள்ளி கல்வித்துறை அதிகாரிகளை, அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.சராசரியாக, ஒரு ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கு, ஒருவர் கூட தேர்ச்சி பெறாத அளவுக்கு, நிலைமை மோசமாக உள்ளது. அரசின் நேரடி கட்டுப்பாட்டில் மட்டும், ஒன்பது ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், அரசின் நிதி உதவி பெறும், 29 நிறுவனங்களும் செயல்படுகின்றன. இவற்றில் பணியாற்றும், நிரந்தர பேராசிரியர்களுக்கு செலவிடும் நிதி அளவுக்கு கூட, மாணவர்கள் தேர்ச்சி பெறாதது ஏன் என, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.எனவே, சம்பந்தப்பட்ட நிறுவன முதல்வர்கள், பேராசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை நடத்தும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post