அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இசை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலம் 75 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நேரடி நியமன கலந்தாய்வு இன்று காலை 11 மணிக்கு எமிஸ் இணையதளம் வழியாக நடைபெற்றது.
இதில் 74 பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
கலந்தாய்வில் நியமன ஆணை பெற்று பணியில் சேர்ந்த தினமே பணிப்பதிவேடு தொடங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.