Title of the document

புதிய பாடத்திட்டத்தில் சாதிப்பதற்கான ரகசியத்தை பிளஸ் 1, பிளஸ் 2 மாணவருக்கு, சொல்லித்தரும் 'சக்சஸ் மந்த்ரா' எனும் பிரத்யேக நிகழ்ச்சியை, &'தினமலர்&' நாளிதழ், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்துகிறது.'ஜெயித்துக்காட்டுவோம்', 'வழிகாட்டி', 'உங்களால் முடியும்', 'அறம் பொருள் ஐ.ஏ.எஸ்.,', 'பட்டம் வினாடி வினா' என பல்வேறு கல்வி நிகழ்ச்சிகளின் வாயிலாக, மாணவர்களது ஒட்டுமொத்த வளர்ச்சியிலும், நலனிலும் &'தினமலர்&' நாளிதழ் பங்கெடுத்து வருகிறது. வரும் மார்ச் மாதம் பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவருக்கு புதிய பாடத்திட்டதை எளிதாக எதிர்கொள்வது எப்படி? என்பதை விரிவாக எடுத்துச் சொல்ல, 'சக்சஸ் மந்த்ரா&' - ஜெயித்துக்காட்டுவோம்



2.0' எனும் வழிகாட்டுதல் நிகழ்ச்சியை, &'அமிர்தா விஸ்வ வித்யாபீடம்&' நிறுவனத்துடன் இணைந்து நடத்துகிறது.ரகசியங்களை அறியுங்கள்பொதுத்தேர்வை எந்தவித அச்சமுமின்றி எதிர்கொள்ளவும், புதிய பாடத்திட்டத்தின் கீழ் புதியதொரு எதிர்காலத்தை பெறவும், தேர்வு காலங்களில் உடல் நலம் மற்றும் மன நலத்தை பாதுகாக்கவும், மாணவர்களுக்கு ரகசியங்களை அள்ளித்தரும் இந்நிகழ்ச்சியில், புதிய பாடத்தின்கீழ் பொதுத்தேர்வு நடைபெறும் விதம் குறித்தும், நுழைவுத்தேர்வுகளுக்கு தயாராகும் விதம் குறித்தும், மனப்பாடம் செய்யாமல் புரிந்து கற்பது குறித்தும், தேர்வுக் களத்தில் செய்ய வேண்டியது குறித்தும், புதிய பாடத்திட்ட தயாரிப்பு குழுவைச் சேர்ந்த வல்லுநர்கள், அனுபவம் வாய்ந்த கல்வியாளர்கள் பங்கேற்று ஆலோசனைகள் வழங்குகின்றனர்.இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் இலவசமாக பங்கேற்கலாம்.



அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களும் தங்கள் பள்ளி பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். பெற்றோர்களும் பங்கேற்கலாம். காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில், பங்கேற்கும் அனைத்து மாணவருக்கும், முக்கிய குறிப்புகள், வினாக்கள் அடங்கிய புத்தகம் இலவசமாக வழங்கப்படும்.நிகழ்ச்சி விபரம்வெற்றிக்கான ரகசிங்களை அறியும் இந்த அற்புத நிகழ்ச்சியில், உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்., சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு அரிய கருத்துக்களை வழங்க உள்ளார். மேலும், பாடத்திட்ட தயாரிப்பு குழுவில் இடம்பெற்ற ஆசிரியர்கள்,'அமிர்தா விஸ்வ வித்யாபீடம்' நிறுவன பேராசிரியர்கள், தன்னம்பிக்கை ஊட்டும் வல்லுநர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.



திருத்தணியில் ...நாள்: 23.11.2019, சனிக்கிழமைஇடம்: செங்குந்தர் திருமண மண்டபம், திருத்தணிகாஞ்சிபுரத்தில்...நாள்: 24.11.2019, ஞாயிற்றுக்கிழமைஇடம்: அன்னை அஞ்சுகம் கல்யாண மண்டபம், காஞ்சிபுரம்சென்னையில்...நாள்: 30.11.2019, சனிக்கிழமைஇடம்: கலைவாணர் அரங்கம், சேப்பாக்கம், சென்னைதிருவள்ளூரில்...நாள்: 01.11.2019, ஞாயிற்றுக்கிழமைஇடம்: அன்னை அஞ்சுகம் கல்யாண மண்டபம், காஞ்சிபுரம்நிகழ்ச்சியில் பங்குபெறுங்கள்! பொதுத்தேர்வில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் சாதனையாளர் ஆகுங்கள்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post