பிளஸ் 1 மாணவர் தகவல் பதிவு தேர்வுத்துறை உத்தரவு

Join Our KalviNews Telegram Group - Click Here
Add This Number In Your Whatsapp Groups - 8608844408

இதுகுறித்து அனைத்து மேல்நிலை பள்ளிகளுக்கும் தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பிளஸ் 1 மாணவர்களுக்கு பொது தேர்வுக்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன. நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 1 படிக்கும் அனைத்து மாணவர்களின் விபரங்களையும் பள்ளி கல்வியின் நிர்வாக மேலாண் தளமான 'எமிஸ்' தளத்திலும் தேர்வு துறையின் இணையதளத்திலும் பதிவு செய்ய வேண்டும்.மாணவர்களின் பெயரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமின்றி பிறந்த தேதி, புகைப்படம், பாலினம், ஜாதி ரீதியான வகைப்பாடு, மதம், மாற்று திறனாளி வகை, பெற்றோர் போன் எண், பாட தொகுப்பு, பயிற்று மொழி, மாணவரின் வீட்டு முகவரி போன்றவற்றையும் பதிவு செய்ய வேண்டும்.பள்ளியில் மாற்று சான்றிதழ் பெறாமல் நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவரின் பெயரும் கட்டாயம் இடம் பெற வேண்டும். மேலும் மாணவரின் சமீபத்திய மார்பளவு புகைப்படமும் பதிவு செய்யப்பட வேண்டும். இந்த விபரங்களை நவ.,26ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments