தமிழகத்தில் அரசு கலை, அறிவி யல் கல்லூரிகளில் 2,331 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலி யாக உள்ளன. இந்த பணியிடங்கள் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான இணையதள விண் ணப்பப்பதிவு கடந்த 4-ம் தேதி தொடங்கியது.
விண்ணப்பிக்கும்போதே சான்றிதழ்களையும் பதிவேற் றும் நடைமுறை முதன்முறை யாக செயல்படுத்தப்பட்டுள் ளது.
இதனால் அனைத்து சான் றிதழ் நகல்களையும் பதிவேற் றம் செய்த பின்னரே பட்டதாரி கள் விண்ணப்பிக்க முடியும்.மேலும், பட்டதாரிகளின் கல்வித் தகுதி மற்றும் பணி அனு பவத்துக்கு தனியே மதிப் பெண்கள் வழங்கப்படுகின்றன. இதற்காக பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் பட்டதாரிகள் தாங்கள் பணிபுரியும் கல்லூரி களில் அனுபவச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
ஆனால், இந்த சான்றிதழ் தருவ தற்கு கல்லூரிகள் தரப்பில் மறைமுககட்டணம் செலுத்த வற்புறுத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.எனவே, இந்த விவகாரத்தில் கல்லூரி கல்வி இயக்குநர் தலை யிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்.30 வரை அவகாசம் உள்ளதால் காலக் கெடுவை நீட்டிக்கவும் பட்டதாரி கள் வலியுறுத்தியுள்ளனர்.