Title of the document


கரூர் அருகேயுள்ள பெரிய வடுகப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஆசிரியர் கண்ணன்(46). இவர், கடந்த 1997-ம் ஆண்டு ஆசிரியர் பணியில் சேர்ந்தார். மிகவும் பிற் படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கண்ணன் பட்டியல் இனத்தவர் என போலி சாதிச் சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சி யர் த.அன்பழகன் நடத்திய விசா ரணையில், ஆசிரியர் கண்ணன் போலி சாதிச் சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்தது தெரியவந் தது. இதையடுத்து ஆசிரியர் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க கரூர் மாவட்டக்கல்வி அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உத்தரவிட்டார். இதையடுத்து, கரூர் மாவட்ட கல்வி அலுவலர்சிவராமன், ஆசிரியர் கண்ணனை பணியிடை நீக்கம் செய்து நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post