Title of the document


வனக்காவலர் பணிக்கான, 'ஆன்லைன்' தேர்வு வினாக்கள், சமூக வலைதளத்தில் வெளியானது தொடர்பாக, வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.தமிழகத்தில், 564 வனக்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் தேர்வு, கடந்த, 4ல் துவங்கி, மூன்று நாட்கள் நடந்தது.

தமிழகம் முழுவதும், 100க்கும்மேற்பட்ட மையங்களில் நடந்த தேர்வில், 1.67 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள், அடுத்தடுத்து, சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. இது, தேர்வில் முறைகேடு நடக்க வழி வகுத்திருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.

இதையடுத்து, தேர்வில் பங்கேற்ற யார் யார் வினாத்தாள், 'லீக்' வேலைகளில் ஈடுபட்டனர் என்பது குறித்து, வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post