Title of the document


உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிமன்ற உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. மொத்தம் 8 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய நீதிமன்றம்

பணியிடம் : தில்லி

பணி : நீதிமன்ற உதவியாளர் (Technical-cum-Programmer)

மொத்த காலிப் பணியிடங்கள் : 08

கல்வித் தகுதி : பொறியியல் துறையில் பட்டம் அல்லது கணினி அறிவியல், தகவல் தொடர்பியல் உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்று குறைந்தது 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.



அல்லது கணினி அறிவியல் பிரிவில் எம்.எஸ்சி முடித்து 3 ஆண்டுகள் பணி அனுபவம் அல்லது கணினி அறிவியல் பிரிவில் பி.எஸ்சி., பிசிஏ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று நான்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்.

வயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.44,900 வரையில் வழங்கப்படும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, தொழில் திறன் தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : www.sci.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.



விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Supreme Court of India, Tilak Marg, New Delhi- 110 201

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 14.10.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://sci.gov.in/pdf/recruitment/Advt%20n%20app%20form%20tech%20post.pdf?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்னும் அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post