ரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் விளையாட்டுத் துறையில் வேலை வேண்டுமா?

Join Our KalviNews Telegram Group - Click Here

மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ.1 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய விளையாட்டு ஆணையம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Nutritionist

காலிப் பணியிடம் : 08

கல்வித் தகுதி : Food and Nutrition, Home Science துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்று 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.75,000 முதல் ரூ.1,00,000 வரையில்

பணி : Chefகாலிப் பணியிடம் : 10

கல்வித் தகுதி : Hotel Management பிரிவில் சான்றிதழ் பெற்று 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.75,000 முதல் ரூ.1,00,000 வரையில்

பணி : Assistant Chef

காலிப் பணியிடம் : 08

கல்வித் தகுதி : Hotel Management துறையில் டிப்ளமோ முடித்து Chef சான்றிதழ் பெற்று 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்.

வயது வரம்பு : 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.30,000 முதல் ரூ.50,000 வரையில்

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 11.10.2019 முதல் 15.10.2019 வரை நடைபெறுகிறது.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடங்கள் : பெங்களூரு மற்றும் புதுதில்லி

நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்களது முழுவிவரங்கள் அடங்கிய பயோடேட்டா, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மற்றும் கீழே அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களை இணைத்து நேர்முகத் தேர்வின்போது சமர்ப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய விரும்புவோர் https://sportsauthorityofindia.nic.in/showfile.asp?link_temp_id=7121 என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.