Title of the document

தேர்வுக்கான கால அட்டவணையையும் டி.ஆர்.பி. அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் டி.ஆர்.பி. யின் http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு தேதி விபரங்களை பதிவிறக்கம் செய்யலாம்.இந்தத் தேர்வு செப் 27,28, 29ம் தேதிகளில் முற்பகல் மற்றும் பிற்பகலில் பாட வாரியாக பிரிக்கப்பட்டு கணினி வழியில் நடத்தப்பட உள்ளது.இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஹால் டிக்கெட்டை பிரதி எடுத்து ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டை மற்றும் விண்ணப்பிக்கும் போது பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதியையும் தேர்வு மையத்துக்கு தவறாமல் எடுத்து வர வேண்டும். ஹால் டிக்கெட்டில் கூறப்பட்டுள்ள நேரத்திற்குள் தேர்வு மையத்துக்கு வர வேண்டும்.

தேர்வு நாளன்று முற்பகல் தேர்வுக்கு காலை 7:30 மணிக்குள்ளும் பிற்பகல் தேர்வுக்கு 12:30 மணிக்குள்ளும் தேர்வு மையத்துக்கு தேர்வர்கள் வர வேண்டும். இந்த கணினி வழி தேர்வுக்கு பயிற்சி தேர்வு மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் தங்களின் உள் நுழைவு குறியீட்டை பயன்படுத்தி டி.ஆர்.பி. இணையதளத்தில் பயிற்சி மேற்கொள்ளலாம்.அதிலுள்ள வினாக்கள் பயிற்சிக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன என்பதை தேர்வர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post