Title of the document

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 0.10% அதிகரிக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரியில் இபிஎப்ஓ-ன் அறங்காவலர்கள் கூட்டம் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தலைமையில் நடைபெற்றது.

அதில், 2018-2019ம் நிதியாண்டிற்கு வட்டி விகிகத்தை 8.65 சதவீதமாக நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் ஏப்ரலில் ருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ) நிர்ணயம் செய்த வட்டி விகிதத்திற்கு மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில் தற்போது வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 0.10% அதிகரித்து 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

வருங்கால வைப்பு நிதி வட்டி அதிகரிப்பால் 6 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்குவார் தெரிவித்துள்ளார். வருங்கால வைப்பு நிதியில் 2018- 19-ம் ஆண்டுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் இபிஎப் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. கடந்த 2017-18 நிதியாண்டில் இபிஎப் வட்டி விகிதம் 8.55 சதவீதமாக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் (2016-17) வட்டி விகிதம் 8.65 சதவீதமாக இருந்தது.  அதற்கு முந்தைய ஆண்டில் 2015-16ல் வட்டி விகிதம் 8.8 சதவீதமாக இருந்தது.

கடந்த மூன்று ஆண்டுகளில் தற்போதுதான் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் இபிஎப் வட்டி விகிதம் 8.7 சதவீதமாக இருந்தது. இதனால், 158 கோடி நிதி பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், இந்த நிதியாண்டில் வட்டி வகிகிதம் 8.65 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து, ரூ.151.67 கோடி உபரி கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 2017-18 நிதியாண்டில்தான் இபிஎப் வட்டி விகிதம் 8.55 சதவீதமாக குறைத்து வழங்கப்பட்டது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post