5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு விதி விலக்கு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!

Join Our KalviNews Telegram Group - Click Here


மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க வாய்ப்பு அளிக்கும் வகையில் 5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு 3 ஆண்டுகளுக்கு விதி விலக்கு அளிக்கப்படும் என்றும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தற்போது நடைமுறையை தொடரும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.  அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடஒதுக்கீடு கொள்கை முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி பள்ளிகளில் விழாக்கள் நடைபெறும் என்றும் கூறினார். காலாண்டு விடுமுறை தொடர்பாக வதந்திகள் புறப்படுகிறது என்றும் பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்தார். பள்ளிகளில் ஒரு நாட்கள் கூட விடுமுறைக்கு வாய்ப்புகள் இல்லை என்று கூறிய அவர், கால அட்டவணை தற்போது மாற்றியமைக்கப்ட்டுள்ளதாக தெரிவித்தார். இதுதவிர, 10 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மொழி படங்களுக்கான இரு தாள் தேர்வு தற்போது ஒரு தாள் தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. இதுதவிர வேறு எந்த அதிரடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என அவர் தெரிவித்தார். தமிழகத்தை பொறுத்தவரை இரு மொழிக்கொள்கை தான் கடைபிடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அமைச்சரவையிலும் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறிறனார்.

🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்