ஆசிரியரின்றி அமையாது கல்வி' நூலை வெளியிட்டு விடுதலை நாள் விழாவை நூதனமாகக் கொண்டாடி மகிழ்ந்த அரசுப்பள்ளி மாணவிகள்!

Join Our KalviNews Telegram Group - Click Here


திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் மன்னார்குடி அருகேயுள்ள மேலகண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று (15.08.2019) சிறப்பாகக் கொண்டாடப்பட்ட 73 ஆவது விடுதலை நாள் விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் அண்மையில் அப்பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் முனைவர் மணி கணேசன்  என்பார் தினமணி,  இந்து தமிழ் திசைஜனசக்தி நாளேடுகளில் எழுதி வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பாக வந்திருக்கும்  ஆசிரியரின்றி  அமையாது கல்வி என்னும் நூலை மேலகண்டமங்கலம் பள்ளி மாணவர் மன்ற தலைவர் வினோதா, துணைத் தலைவர் மணிமேகலை உள்ளிட்ட மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் சக மாணவ, மாணவிகள் முன்னிலையில் வெளியிட்டு மகிழ்ந்தனர். 

இந்நூலை மாணவர்கள் வெளியிடுவதுதான் மிக பொருத்தமான செயலாக இருக்கும் என்பதால் இந்த இனிய நன்னாளில் மறுவெளியீடாக இந்நூல் வெளியிடப்பட்டது எனக்குப் பெருமகிழ்ச்சி என்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் மிக்க நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாக நூலாசிரியர் மணி கணேசன் தெரிவித்தார்

🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்