Title of the document

இன்று காலை பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்கள் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் 2017 - 18 கல்வியாண்டில்படித்த மாணவர்களுக்கு அடுத்த 3 மாதங்களில் கணினி வழங்கப்படும்எனவும், தற்போது படித்து வரும் பதினோராம் வகுப்பு மற்றும் 11ம் & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கியூ ஆர் கோட் பயன்படுத்தி பாடங்களைபடிக்க வேண்டி இருப்பதால் உடனடியாக கணினி வழங்கப்பட்டுள்ளதுஎனவும் தெரிவித்தார். மேலும் தற்போது உள்ள புதிய பாட திட்டத்தைமுழுமையாக படித்து முடிக்க 240 நாட்கள் தேவைப்படும் எனவும்அதனை பள்ளி செயல்படும் 220 நாட்களுக்குள்ளாக பயின்று முடிக்கஇந்த கணினிகள் அவர்களுக்கு பயன்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் பள்ளிக் கல்வித்துறையின் புதிய அறிவிப்புகள் எப்போதுவெளியிடப்படும் என நிருபர்கள் கேட்டதற்கு அடுத்த இரண்டுநாட்களுக்கு பிறகு மாண்புமிகு முதலமைச்சர் திரு எடப்பாடி அவர்கள்முறையாக பள்ளிக்கல்வித் துறையின் மிக முக்கிய அறிவிப்புகளைவெளியிடுவார் என வும் பேட்டியளித்தார். புத்தகங்கள் இதுவரை முழுமையாக வழங்காதது குறித்து எந்த நிருபரும்கேள்வி எழுப்பாதது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post