Title of the document

ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பணிபுரியும் விரிவுரையாளர்கள், பள்ளிகளை ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து பயிற்சி நிறுவன முதல்வர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பணிபுரியும் முதல்வர், முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள் மாவட்டத்தில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட, ஒரு ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளை பார்வையிட்டு, மாணவர்களின் கற்றல் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன்களை மேம்படுத்துதல் குறித்து, பார்வையிட்டு வருகின்றனர். பாட வாரியாக உள்ள, அடிப்படை திறன்களை மாணவர்கள் அடைந்துள்ளார்களாஎன்பதையும் சோதிக்கின்றனர்.இவர்களின் ஆய்வுப்பணி, இறை வழிபாட்டு கூட்டத்தில் துவங்கி, பள்ளி முடியும் வரை நடக்கிறது. பள்ளி முடிந்த பிறகு, ஆசிரியர்களை அழைத்து மாணவர்களின் கற்றல் மற்றும் கல்வி சார் திறன்களை மேம்படுத்துதல் குறித்து ஆலோசனைகூட்டம் நடத்துகின்றனர்.

தமிழ்நாடு ஆசிரியர்கள் என்ற தளத்திலுள்ள கல்விவளங்கள் மற்றும் மதிப்பீட்டு வினாக்களை சரியாகபயன்படுத்துகிறார்களா என்பது குறித்தும், ஆய்வு மேற்கொள்கின்றனர். மேலும், அனைத்து விரிவுரையாளர்களும், பிரதி மாதம், 5க்குள், 16 பள்ளிகளை பார்வையிட்டு, அதன் அறிக்கையை மாநில கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post