Title of the document

தமிழகத்தில் பொது கலந்தாய்வு விதிகளில் ஆசிரியர்கள் நலன் கருதி சில திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.அச்சங்க பொதுச்செயலாளர் ரங்கராஜன் தெரிவித்துள்ளதாவது:நடப்பாண்டிற்கு (2019 -20) நடக்கும் ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 8 முதல் நடக்கிறது. இதற்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர் மூன்று ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணியாற்றியிருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.இதுபோல் மனமொத்த (மியூச்சுவல்) மாறுதல் பெறவும் மூன்று ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணியாற்றியிருக்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற உத்தரவுகளால் பெரும்பாலான ஆசிரியர்கள் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்படும்.மேலும், தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்ற ஆசிரியர்களில் 1.6.2006க்கு முன் பணியில் சேர்ந்திருப்பின் அப்பணிக் காலத்தையும் கணக்கில் கொண்டு முன்னுரிமை நிர்ணயம் செய்ய வேண்டும். 
பணி நிரவலில் சீனியர் ஆசிரியர் பாதிக்காத வகையில், சம்மந்தப்பட்ட ஒன்றியத்தின் ஒட்டுமொத்த முன்னுரிமை பட்டியலில் மிகவும் ஜூனியர் ஆசிரியரை நிரவல் செய்யும் வகையில் கலந்தாய்வு விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post