Title of the document

டிஎன்பிஎஸ்சி-யின் 6,491 காலி பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகளை ஏழை மாணவர்களுக்காக டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் நடத்துகிறது.
இதுகுறித்து டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:
தமிழ்நாடு அரசுத் தேர்வாணையத்தால் கடந்த 14-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட குரூப்-4 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு, வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் ஜூன் -14 முதல் தொடங்கியது.
குரூப்- 4 தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கான இலவசப் பயிற்சி வகுப்பை டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையமும், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும் இணைந்து ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் திட்டமிட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.


சென்னையில் பயிற்சி வகுப்புகள் எண். 6/9, சிஐடியூ அலுவலக கட்டடம், கச்சாலீசுவரர் கோயில் அக்ரஹாரம், அரண்மனைக்காரன் தெரு, பாரிமுனை, சென்னை என்ற முகவரியில் வரும் 22-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9.30 மணியளவில் தொடங்குகிறது. வகுப்புகள், வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். பயிற்சி பெற விரும்புவோர் 98847 47217, 93449 51475, 94446 41712 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post