Title of the document

சென்னை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்கி மழைநீரை சேமிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாவட்டத்தில் இயங்கும் உயர்நிலை, மேனிலைப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது நடந்தது. அதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்ச் செல்வி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கிய அறிவுறுத்தல்கள் விவரம்:
இன்னும் சில நாள்களில் மழைக்காலம் தொடங்க உள்ளது. அதனால், சென்னையில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் என அனைத்துப் பள்ளிகளும் இந்த வார இறுதிக்குள் தங்கள் பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும்.


மழை பெய்யும்போது மொத்த நீரும் அந்த சேமிப்பு தொட்டியில் சேரும் வகையில் ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அதன் பயன்களை மாணவர்களிடம் எடுத்துக் கூற வேண்டும். சென்னை மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறையை போக்குவதற்கு இனிவரும் காலங்களில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் முயற்சியில் இறங்காவிட்டால் நம் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும் என்பதையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். மழை பெய்யும்போது கிடைக்கும் நீரை சரியாக சேமிக்காமல், கடலில் கலக்க விட்டதால் ஏற்பட்ட இந்த அவல நிலையை மழைநீர் சேமிப்பின் மூலம்தான் சரிசெய்ய முடியும் என்பதையும் மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இது தொடர்பாக மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.


அதனால், ஏற்கெனவே தங்கள் பள்ளிகளில் மழைநீர் சேமிப்பு தொட்டிகள் இருந்தால் அவற்றை தூர்வாரி சரியாக பராமரிக்க வேண்டும். இது தொடர்பாக புகைப்படத்துடன் கூடிய ஆவணத்தை ஒவ்வொரு பள்ளியும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post