Title of the document


தமிழகத்தில் சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடிகளில் சுகாதாரத்துடன் உணவு தயாரிக்கப்படுகிறதா என உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.தமிழகத்தில் 43 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சத்துணவு மையங்கள் மூலம் 50 லட்சம் மாணவ - மாணவியர் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர்.

அங்கன்வாடிகளிலும் சத்துணவு வழங்கப்படுகிறது. இம்மையங்களில் சமையலர்கள் துாய்மையானமுறையில் உணவு சமைப்பதற்காக சுகாதாரப் பெட்டகங்கள் சமீபத்தில் வழங்கப்பட்டன.வாரந்தோறும் சத்துணவு மையங்களில் ஒட்டடை அடித்தல் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வெள்ளையடித்தல்தினமும் சமைக்கும் உணவை அரை கிலோ அளவு கண்ணாடி பாட்டிலில் மாதிரி சேகரித்தல் உள்ளிட்ட அறிவுரைகள் சமையலர்களுக்கு வழங்கப்பட்டுஉள்ளன.

மாணவர்களுக்கு உடல் உபாதை ஏற்படும்போது சத்துணவில் என்ன கலந்துள்ளது என்பதை அறிவதற்காகவே உணவு மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. 'இதைப் பின்பற்றாத ஊழியர்கள் கண்டறியப்பட்டால் 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர்' என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ளது.அந்தந்த பகுதிஉணவுப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் சத்துணவு மற்றும் அங்கன்வாடிகளில் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்படுகிறதா என்பது குறித்து தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் ஆய்வுகள் நடந்து வருகின்றன.'ஆய்வில் பல்வேறு மையங்களிலும் பாட்டிலில் உணவு மாதிரியை சேகரித்து ஊழியர்கள் வைத்திருந்தது தெரிந்தது. விதிமுறைகளை கடைப்பிடிக்காத ஊழியர்களுக்கு முதல் முறை என்பதால் எச்சரிக்கை விடுக்கப்படும். அடுத்த முறை ஆய்விலும் பின்பற்றா விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்' என அதிகாரிகள் கூறினர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post