Title of the document



 பன்னிரெண்டாம் வகுப்பு தமிழ் புத்தகத்தின் அட்டைப் படத்தில் இடம்பெற்றிருக்கும் பாரதியாருக்கு காவி நிறத்தில் தலைப்பாகை இடம்பெற்றிருப்பது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

கோடை விடுமுறைக்குப் பின்னர் ஜூன்-3 ஆம் தேதியன்று தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் மாணவர்களுக்கு புதிய புத்தகங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பன்னிரெண்டாம் வகுப்பு தமிழ் புத்தகத்தின் அட்டைப் படத்தில் இடம்பெற்றிருக்கும் பாரதியாருக்கு காவி நிறத்தில் தலைப்பாகை இடம்பெற்றிருப்பது புதிய சர்ச்சையை உருவாகியுள்ளது.  இதுதொடர்பான படங்கள் பத்திரிகைகள் மற்றும் சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவின.



இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட விபரம் வருமாறு:

அந்த அட்டைப் படத்தில் இருக்கும் பாரதியாரின் படம் தேசியக்கொடியின் வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதில் எந்த ஒரு தவறான உள்நோக்கமும் இல்லை.

குறிப்பிட்ட அந்த  புத்தகத்தில் பாரதியாரைப் பற்றி ஒரு பாடம் வைக்கப்பட்டுள்ளது. அதிலும் கூட எந்த ஒரு இடத்திலும் அவர் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தவர் என்றோ, மத அடையாளங்களோடு கூடிய கருத்துக்களோ குறிப்பிடவில்லை. இதுகுறித்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post