வங்கியில் இருந்து பணம் எடுத்தால் வரி: மத்திய அரசு அறிவிப்பு

வங்கியில் இருந்து ஆண்டுக்கு ரூ.10 லட்சம் பணம் எடுத்தால் வரி என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் ஏழை, எளிய நடுத்தர வர்க்கத்தினர்களுக்கு பாதிப்பு இல்லை என்றாலும் சிறுதொழில் மற்றும் பெரும் தொழில் செய்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது

ரூபாய் நோட்டு புழக்கத்தை குறைக்கும் நடவடிக்கையாக இந்த வரிவிதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கை மூலம் டிஜிட்டல் பணவர்த்தனை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது