தொடக்க கல்விக்கான, டிப்ளமா ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர்வதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, நேற்று துவங்கியது.
பிளஸ் 2 முடித்தவர்கள், தொடக்க பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர, பள்ளி கல்வி துறை நடத்தும், டிப்ளமா ஆசிரியர் பயிற்சி படிப்பை படிக்கலாம். 'டீச்சர் டிரெய்னிங்' என, கூறப்படும், டி.எல்.எட்., என்ற இந்த படிப்பை, பள்ளி கல்வி துறையின் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடத்துகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும், பள்ளி கல்வி துறையின் சார்பில், 32 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. அதேபோல, 250க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும் இயங்குகின்றன. இவற்றில், மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடத்துகிறது.இந்த ஆண்டில் டிப்ளமா படிப்பில் சேர விரும்புவோருக்கு, நேற்று முதல் ஆன்லைன் பதிவு துவங்கியது. வரும், 24ம் தேதி வரை பதிவு செய்யலாம். பார்வையற்றவர்கள், காது கேளாதவர்கள் மற்றும் வாய் பேச முடியாத மாற்று திறனாளிகள், இந்த படிப்புகளில் சேர முடியாது. மற்ற நிபந்தனைகள் மற்றும் விபரங்களை, www.tnscert.org என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment