கணினி கோளாறு : மறுதேர்வு ஜூன் 27ஆம் தேதி நடைபெறும்-ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

கணினி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு தமிழகம் முழுவதும் 119 மையங்களில் நேற்று நடைபெற்றது .
ஆனால் நேற்று ஆசிரியர் தகுதி தேர்வின்போது மென்பொருள் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக தேர்வு எழுத முடியாமல் தேர்வர்கள் தவித்தனர்.

இதனால் கணினி வழி தேர்வில் குளறுபடி ஏற்பட்ட இடங்களில் வேறு ஒரு நாளில் தேர்வு நடைபெறும். தொழில்நுட்பக் கோளாறால் தேர்வை முழுமையாக நிறைவு செய்யாதவர்களுக்கு வேறு ஒரு நாளில் தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் தெரிவித்தார்.

இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் ,மறுதேர்வு ஜூன் 27ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்டோருக்கு மட்டும் மறுதேர்வு நடத்தப்படுகிறது என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.