Title of the document

இந்திய கடற்படையில், பல்வேறு பிரிவுகளின் கீழ் பணிபுரிவதற்கு, 121 காலிப்பணியிடங்களுக்கு ஜூன்-2020 பயிற்சியுடன் கூடிய வேலைக்கான இந்தியன் நேவி எண்டரன்ஸ் தேர்வு (INET) பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், திறமையும் வாய்ந்த, திருமணமாகாதஆண்கள் மற்றும் பெண்கள் போன்ற இருபாலரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

பணி:
எக்சிகியூடிவ் பிரிவு பணி
டெக்னிக்கல் பிரிவு பணி
எஜூகேஷன் பிரிவு பணி

காலிப்பணியிடங்கள்:
எக்சிகியூடிவ் பிரிவு பணி = 55
டெக்னிக்கல் பிரிவு பணி = 48
எஜூகேஷன் பிரிவு பணி = 18

மொத்தம் = 121 காலிப்பணியிடங்கள்

பயிற்சி காலம்: 22 வாரங்கள்

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 18.05.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.05.2019
INET - நுழைவுத்தேர்வு நடைபெறும் தேதி: ஆகஸ்ட் - 2019.

வயது வரம்பு:
குறைந்தபட்சமாக 19 1/2 வயது முதல் அதிகபட்சமாக 25 வயது வரையும் இருத்தல் வேண்டும்.

02.07.1995 முதல் 01.01.2001-க்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.
எஜூகேஷன் பிரிவு பணிக்கு மட்டும் 02.07.1995 முதல் 01.01.1999-க்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.

தேர்வுக்கட்டணம்:
பொது / ஓபிசி பிரிவினர் - ரூ.205
எஸ்.சி/ எஸ்.டிபிரிவினர் / பெண்கள் போன்றோர் தேர்வுக்கட்டணம் செலுத்த தேவையில்லை.

கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக, பி.இ / பி.டெக் / எம்.சி.ஏ / எம்.எஸ்.சி பட்டப்படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் பயின்று குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

குறிப்பு:
10, 12 ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
கடைசி வருடம் பி.இ / பி.டெக் பட்டப்படிப்பில் பயின்று கொண்டிருப்பவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைனில், www.joinindiannavy.gov.in/ - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:
எஸ்.எஸ்.பி மூலம் ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என்ற இரு நிலைகளில் தேர்வு நடத்தப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நுண்ணறிவுத் திறன், கலந்துரையாடல், உளவியல் தேர்வு, குழு தேர்வு, நேர்க்காணல் போன்ற தேர்வு முறைகள் நடைபெறும்.

INET - நுழைவுத்தேர்வு முறை:
100 கேள்விகள், 100 மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்டு 2 மணி நேரத்தில் முடிவடையும். தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு.

பதவி உயர்வு:
பயிற்சிக்கு பின் சப்-லெப்டினன்ட் முதல் கமாண்டர் பதவி வரை பதவி உயர்வும், ஊதிய உயர்வும் பெற வாய்ப்புண்டு.

மேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற, https://www.joinindiannavy.gov.in/files/event_attachments/INET_OFFICER_ADV_JUN2020_final.pdf - என்ற இணையதள முகவரிக்கு சென்று பார்க்கலாம்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post