அரசு கல்லூரிகளில் விரிவுரையாளர் பற்றாக்குறை அதிகரிப்பு

Add This Number In Your Whatsapp Groups - 9786053272
📲👉 👉 Join Our KalviNews Telegram Group - Click Here

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் மற்றும் பிற பணியாளர்கள் காலியிட எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் உடனடியாக நிரப்பவேண்டும் என மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர்வரை 91 அரசு கலைக்கல்லூரிகளும் 7 அரசு பிஎட் கல்லூரிகளும் இருந்தன.

வரும் கல்வியாண்டில் (2019-20) ராமேஸ்வரத்தில் அரசு கலைக்கல்லூரி தெடங்க வாய்ப்புள்ளது. மேலும் 14 பல்கலைக்கழக உருப்பு கல்லூரிகள் அரசு கலைக்கல்லூரிகளாக மாற்றம் பெறுகின்றன என கடந்த ஆண்டு அரசு அறிவித்தது.

இதன் காரணமாக தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் எண்ணிக்கை 113ஆக உயர்கிறது

. கல்லூரிகளில் எண்ணிக்கை உயரும் அதே நேரத்தில் மிகமுக்கிய தேவையான ஆசிரியர் பணி காலியிடங்களுக்கு கடந்த 2015க்கு பின்னர் நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை.

 ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் கலைக்கல்லூரிகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டாலும் காலியிட எண்ணிக்கை தொடர்கிறது அல்லது உயர்கிறது.தற்போதைய நிலையில் 4 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருக்கலாம் என ஆசிரியர்கள் வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.

சுமார் 3 ஆயிரத்து 500 கெஸ்ட் லெக்சரர்கள் உள்ளனர். ஆனால் மேலும் ஆயிரம் கெஸ்ட் லெக்சரர் பணியிடம் உருவாக்கினாலும் போதுமான அளவு இருக்காது என்பதே தற்ேபாதைய நிலை.

இதுகுறித்து அரசு கலைக்கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் தரப்பில் பெற்றோர் கூறுகையில், ‘‘தமிழகத்தில் தற்போது கலை மற்றும் அறிவியல் கல்விக்கே மாணவர்கள் முக்கியத்தும் கொடுக்கின்றனர். இதனால் உயர்கல்வியில் கலை அறிவியல் முன்னிலை பெற்றுவருகிறது.

அதே நேரத்தில் தனியார் கல்லூரிகளைவிட கட்டணம் இன்றி படிக்கமுடியும் என்பதால் மாணவ, மாணவிகள் தங்களது முதல் தேர்வாக அரசு கலை அறிவியல் கல்லூரில் பயில விரும்புகின்றனர்.

இதன் காரணமாக கலை, அறிவியல் கல்லூரிகளில் இருக்கிற இடங்களின் எண்ணிக்கையை விட 3 முதல் 6 மடங்குவரை மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர். இதனால் கடும் போட்டிக்கு பின்னரே அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்கின்றன.

ஏற்கனவே பல ஆண்டுகளாக செயல்படும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் தேவையான வசதிகள் உள்ளன. ஆனால் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. கவுரவ விரிவுரையாளர்கள் நீண்டகாலமாக பணியில் இருக்கின்றனர்.

நிரந்த விரிவுரையாளர்களை நியமிக்கவேண்டும். காலி பணியிடம் இருப்பதால் இருக்கிற ஆசிரியர்கள் சமாளிக்கும் நிலை உள்ளது. இதனால் மாணவர்கள் கற்கும் திறன் பாதிக்க வாய்ப்புள்ளது.

 ஆர்வத்துடன் விரும்பி வரும் மாணவர்களுக்கு சிறந்த ஆசிரியர்கள் மூலம் கற்றுத்தர நடவடிக்கை எடுத்தால்தான் அரசு கலைக்கல்லூரிகளின் சிறப்பு மேலோங்கும் பல ஏழை நடுத்தர மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் சுயநிதிபிரிவில் அதிக பணம் கட்டி படிக்கும் நிலை உள்ளது. இந்த நிலையைமாற அரசு கல்லூரிகளில் காலியிடம் ஏற்படாதவகையில் பார்த்துக்கொள்ளவேண்டும்’’ என்றனர்

📲👉 👉 Join Our KalviNews Telegram Group - Click Here

Post a Comment

0 Comments