இடைநிலை ஆசிரியர்கள் அங்கன்வாடி மையங்களுக்கு பதிவிறக்கம் செய்யும் நீதிமன்ற ஆணை - மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831

இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு பணியிறக்கம் செய்யும் நீதிமன்ற உத்தரவு வெளியான நாள் முதல் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக நீதிமன்றத்தில் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டதால்  இன்று 29.05.19 அங்கன்வாடி மையத்திற்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிக்கும் தீர்ப்பை மறு சீராய்வு செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதுகுறித்து தற்போது மதுரை உயர்நீதிமன்ற கோடை விடுமுறை நீதிமன்றத்திலிருக்கும் நீதியரசர்கள் எங்களால் ஒன்றும் செய்ய இயலாது,  நீங்கள் வரும் மூன்றாம் தேதிக்கு பின்னர் வழக்கை தீர்ப்பளித்த நீதியரசர் திரு.கிருபாகரன் அவர்களிடமே "மறுசீராய்வு மனுவை" நேரில் தாக்கல் செய்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டனர்.இனி நமக்கு இருக்கும் ஒரே ஆயுதம் புதுதில்லி உச்சநீதிமன்றம் மட்டுமே.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய நாட்கள் மிக குறைவாக உள்ள காரணத்தினால் வரும் திங்கட்கிழமை 03.06.2019 முதல் நமது ஆசிரிய பெருமக்கள் 7 நாட்கள் ஈட்டியவிடுப்பு எடுத்து அங்கன்வாடி மையங்களில் பணியில் சேராமல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தடை ஆணை வரும் வரை காத்திருந்தால் மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் நாம் தடையாணை பெற முடியும்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி இதுவரை இந்த வழக்கிற்கும் மட்டும் நமது பொது நிதியில் இருந்து இரண்டு‌ லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகியுள்ளது.(மதுரை மற்றும் சென்னை இரண்டு வழக்கிற்கும் சேர்த்து).

இனி புதுதில்லி உச்சநீதிமன்றம் செல்லும் பொழுது இதைவிட மிக அதிகமான செலவு ஏற்படும். செலவினை பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் தான் அதனை ஈடுசெய்ய முடியும். எனவே வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் உடனடியாக அங்கன்வாடி மையங்களுக்கு பணியிறக்கம் செய்யப்பட்ட பாதிக்கப்பட்ட ஆசிரியர்களை தொடர்பு கொண்டு உச்ச நீதிமன்றம் சென்றால் வழக்கிற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பது,  3 ம் தேதி ஈட்டிய விடுப்பு எடுப்பது உறுதி செய்யப்பட்டு,  மாவட்டஒருங்கிணைப்பாளர் களுக்கு தகவல் அளிக்கவும். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஒவ்வொரு ஒன்றியம் வாரியாக சேகரித்து பட்டியலை தயார் செய்து மாநில ஒருங்கிணைப்பாளர்களிடம் அளிக்கவும்.

மிக மிக அவசரம்...

2009 & TET மாநில போராட்டக்குழு தலைமை.

Post a comment

0 Comments