Title of the document

வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நேரடி நியமனம் 30%-லிருந்து 50% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நிர்வாக நலன் கருதி நேரடி நியமனத்தை அதிகரித்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அறிவித்துள்ளார்.

வட்டார கல்வி அலுவலர் பணியிடம் என்பது ஒரு வருடத்திற்கு முன்பாக உருவாக்கப்பட்டது. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர்கள் வட்டார கல்வி அலுவர்களாக நியமிக்கப்படுவார்கள். அதன்படி, உதவி கல்வி அலுவலர்களாக இருந்தவர்கள் வட்டார கல்வி அலுவலர்களாக மாற்றப்பட்டு நியமிக்கப்பட்டார்கள். அவ்வாறு மாற்றப்பட்ட போது அவர்களின் அதிகாரமும் உயர்த்தப்பட்டது. இதனால் அவர்களுக்கான வேலை பணிகள் மற்றும் பொறுப்புகள் அதிகமானது.

சிபிஎஸ்சி பள்ளிகள், தனியார் பள்ளிகள், அதேபோல அரசு பள்ளிகள் என அனைத்திற்கும் நலத்திட்டங்களை கொண்டு சேர்ப்பது முதல் அதனை நேரடியாக கண்காணிப்பது என அதிக பணி சுமைகள் இருந்தன. பதவி உயர்வு மூலமாகவோ அல்லது பணி மாறுதல் மூலமாகவோ வட்டார கல்வி அலுவலர் பணியிடம் நிரப்படுவது 70% ஆக இருந்தது. 30 சதவிகித பணியிடங்கள் மட்டுமே ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனமாக நடத்தப்படும் என ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இந்த நிலை மாற்றப்பட்டுள்ளது.

நேரடி நியமனம் 30%- லிருந்து 50%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நிர்வாக பணிகளை சிறப்பாக மேற்கொள்ள முடியும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 50% வட்டாரக்கல்வி அலுவலர்களை நேரடி நியமனம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

Click here GO...

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post