RTE act 2010 அடிப்படையில் TNTET கட்டாயம் என்ற நிபந்தனைகள் பற்றி தெரியாமல் உள்ள பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் : - தெளிவுப்பதிவு.
கட்டாயக் கல்வி உரிமை சட்டம் 2009 ல் இந்தியா முழுமைக்கும் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் RTE சட்ட அமலாக்கம் பெற்று 23/08/2010 ல் மத்திய அரசு வெளியிட்டது.
இதனை ஒரு சில மாநிலங்கள் மட்டுமே ஆரம்பத்தில் ஏற்று அமலாக்கங்கள் அந்தந்த மாநிலங்களில் அரசாணைகளாக வெளியிட்டன.
தமிழகத்தில் 15/11/2011 ல் அரசாணை எண் 181 வடிவில் RTE சட்டம் நீண்ட இழுபறிக்கு பின்னர் வெளிவந்தது .
இதில் ஆசிரியர் நியமனங்கள் குறித்த விளக்கம் RTE சட்ட அமலாக்கம் மத்திய அரசு தேதியையே சாரும் என குறிப்பிடப்பட்டது.
அதாவது 23/08/2010 க்கு பிறகு பணி நியமனம் பெற்றவர்கள் மற்றும் பெறுபவர்கள் அனைவருக்கும் TNTET கட்டாயம் என்ற நிபந்தனை வட்டத்தில் கொண்டு வரப்பட்டனர்.
இதன் முழுமையான திரட்டு கூறுவது யாதெனில்....
1) ஒருவர் 23/08/2010 க்கு பிறகு புதிதாக பட்டதாரி ஆசிரியர் பணியில் அல்லது இடைநிலை ஆசிரியர் பணியில் ( அரசு ) சேர்ந்தாலோ,
2) 23/08/2010 க்குப் பிறகு ஆசிரியர் பணியிடம் அல்லாத அரசு பணியிடத்தில் இருந்து ஆசிரியர் பணியிடத்திற்கு பதவி உயர்வு பெற்றாலோ,
3) 23/08/2010 க்குப் பிறகு இடைநிலை ஆசிரியர் பணியில் இருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றாலோ ...
4) 23/08/2010 க்குப் பிறகு சத்துணவு பணியில் இருந்து பயின்று இடைநிலை அல்லது பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றாலோ...
5) சிறுபான்மையினர் பள்ளிகளில் 23/08/2010 க்கு பிறகு ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் ( TET வழக்கு இன்னும் மேல்முறையீீட்டு ( Supreme Court ) வழக்கு நிலுவையில் உள்ளதால் )
குழந்தைகள் RTE ACT அடிப்படையில் அவர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் TNTET கட்டாயம் எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணியில் தொடர முடியும் என்ற நிலை இருந்தது.
இது மேலும் நீட்டிப்பு செய்யப்பட்டு 2019 மார்ச் 31 வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டது.
RTE ACT புரிதல் இல்லாமல் கடந்த 8 வருடங்களாக தான்தோன்றித் தனமாக செயல்பட்டுவரும் கல்வித்துறை உயர் அதிகாரிகள் , ஒவ்வொரு கல்வி மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு முடிவுகள் எடுத்து ஆசிரியர் பணி நியமனங்கள், மற்றும் RTE act பற்றிய புரிதல் இல்லாமல் பதவி உயர்வு போன்ற பல்வேறுபட்ட அணுகுமுறைகளுக்கு அனுமதி அளித்துவிட்டனர்.
இந்த நிகழ்வுகள் அதிகமாக அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் அற்ற பள்ளிகளில் அதிகம் நடைபெற்றது தற்போதுதான் தெரிய வந்துள்ளது.
RTE ACT 2009 அடிப்படையில் நடைபெற வேண்டிய முறையான ஆசிரியர் நியமனங்கள் , TET கட்டாயம் என்ற நிபந்தனைகளுடனோ அல்லது நிபந்தனைகள் குறிப்பிடாமலோ பதவி உயர்வு பெற்றவர்கள் யாராயினும் 23/08/2010 க்கு பிறகு பணி நியமனம் அல்லது பதவி உயர்வு பெற்று இருப்பின் தற்போது அறிவித்துள்ளது TNTET க்கு விண்ணப்பம் அவசியம் செய்து தேர்ச்சி பெற முயற்சிகள் மேற்கொண்டு ஏற்கனவே உள்ள பணியை தக்கவைத்துக்
கொள்ளுங்கள்.
அரசு கல்வித்துறை உயர் அதிகாரிகள் மற்றும் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்கும் இந்த புரிதலை முறையாக கொண்டு சேர்க்க தமிழக அரசு முன் வர வேண்டும். பணியில் உள்ள ஆசிரியர்கள் பணிப் பாதுகாப்பு சம்மந்தமான ஒரு நல்ல தீர்வும் விரைவில் எடுக்கப்பட வேண்டும்.
( 23/08/2010க்கு முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட ஆசிரியர் பணியிட நிரப்புதல் செயல்பாடுகள் நடைபெற்று இருந்தால் மட்டுமே TET லிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது )
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment