நாளை வெளியாக போகும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்!! தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
*தமிழக பள்ளிக்கல்வியின் சமச்சீர் பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 29-ம் தேதியுடன் முடிவடைந்தன. இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 9.97 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர்*
*இந்நிலையில் ஏற்கெனவே அறிவித்தபடி 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை ஏப்ரல் 29 காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளன*
*தமிழக மாணவர்கள் மேலும் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள tamil nadu.indiaresults.com examresults.net/tamilnadu என்ற இணையதளப் பக்கத்தையும் காணலாம்*
*மேலும் எல்லா மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்கள் அனைத்து நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை அறிய முடியும்*
*♦♦தேர்வு முடிவுகளை அறிந்துகொள்வது எப்படி?*
*1. tnresults.nic.in என்ற இணையதள பக்கத்துச் செல்லவும்*
*2. TN SSLC Result 2019, TamilNadu Result 2019 எனத் தேர்வு செய்யவும்*
*3. தேர்வு பதிவு எண்ணை பதிவிடவும்*
*4. பிறந்த தேதி பதிவிடவும்*
*5. தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். தேவைப்பட்டால் பதிவிறக்கமும் செய்துகொள்ள முடியும்*
*இதையடுத்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மே 2-ம் தேதி முதல் தாங்கள் படித்த பள்ளி அல்லது தேர்வெழுதிய மையத்தின் தலைமையாசிரியர் மூலம் இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்*
*மாணவர்கள் மே 6-ம் தேதி முதல் www.dge.tn.nic.in இணையதளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்*
*மறுகூட்டலுக்கு பள்ளி மாணவர்கள் பள்ளிகள் மூலமும் தனித்தேர்வர்கள் தேர்வுமையங்கள் வழியாகவும் மே 2 முதல் 4 வரை விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்போர் மொழிப் பாடங்களுக்கு ரூ.305, மற்ற பாடங்களுக்கு ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும் என தேர்வுத்துறை அதிகாரிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment