பள்ளிகளின் அருகில் புகையிலை பொருட்கள் விற்பனையா.? போலீஸிடம் புகாரளிக்க தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831

பள்ளிகளின் அருகில் புகையிலை பொருட்கள் விற்பனையா.? போலீஸிடம் புகாரளிக்க தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு

*பள்ளிகள் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் பற்றிய தகவல்களை, போலீசிற்கு தெரிவிக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது*

*மாணவர்களுக்கு சாக்லெட், சிப்ஸ் போன்ற வகைகளுடன் சிகரெட்டுகளை விற்பனை செய்யும் கும்பல்கள் பள்ளிகளின் அருகில் தென்பட்டால், உடனடியாக தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது*

*இது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது*

*அதில் பள்ளி மாணவர்களை புகையிலை விற்கும் கும்பல்களிடமிருந்து காக்க, தலைமையாசிரியர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது*

*மாணவர்களை தீய பாதைகளுக்கு அழைத்து செல்லும் கும்பல் பற்றி, காவல் நிலையத்துக்கு உரிய தகவல்களை அளிக்க வேண்டும்*

*இதன் மூலம் புகையிலை விற்பவர்களின் பிடியில் இருந்து பள்ளி மாணவர்களை காக்க முடியும். இவ்விவகாரத்தில் தலைமை ஆசிரியர்களின் நடவடிக்கைகளே பிரதானமாகும் எனவும் பள்ளிக்கல்வி இயக்குனரகம் கூறியுள்ளது*

*எனவே தலைமை ஆசிரியர்களுக்கு இது தொடர்பாக உரிய அறிவுறுத்தலை வழங்குமாறு, மாவட்ட முதன்மை பள்ளி கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்*

Post a comment

0 Comments