விழுப்பரம்:விழுப்புரம் கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் ஓய்வூதியர்கள் ஏப்.1 முதல் ஜூன் 28-ம் தேதி வரை தங்களின் நேர்காணலை பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இதுகுறித்து விழுப்புரம் கருவூல அலுவலக செய்திக்குறிப்பு :
கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் ஏப்.1 முதல் ஜூன் 28-ம் தேதி வரை கருவூலத்தில் ஆஜராகி தங்களின் நேர்காணலை பதிவு செய்வது அவசியம். நேரில் வர இயலாதவர்கள் வாழ்வு சான்று பெற்று கருவூலத்திற்கு அனுப்ப வேண்டும்.ஜீவன் பிராமன் வாழ்வு சான்றிதழ் திட்டம் மூலம் ஓய்வூதியர்கள் சம்பந்தப்பட்ட கருவூலங்களுக்கு செல்லாமலேயே அரசு இ-சேவை மையம் வழியாக நேர்காணல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.ஓய்வூதியர்கள் நேர்காணலுக்கு வரும்போது, ஓய்வூதிய புத்தகத்துடன், பான் கார்டு, குடும்ப அடையாள அட்டை, நடைமுறையில் உள்ள வங்கி கணக்கு எண் ஆகியவற்றை சமர்ப்பிக்காதவர்கள் அந்த ஆவண நகல்களுடன், பிபிஓ எண் குறிப்பிட்டு கருவூலத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
நேரில் வர இயலாதவர்கள் ஓய்வூதியர் புத்தகத்துடன் மேற்சொன்ன ஆவணங்களுடன் வாழ்வு சான்றிதனை உரிய படிவத்தில் கருவலத்திற்கு அனுப்ப வேண்டும். வாழ்வு சான்றினை www.tn.gov.in/karuvoolam என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, ஓய்வூதிய வங்கி கணக்குள்ள வங்கி கிளை மேலாளர், அல்லது அரசிதழ் பதிவு பெற்ற மாநில, மத்திய அரசு அலுவலர், தாசில்தார், துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் ஆகிய ஒருவரிடம் சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும்.அனைத்து நகல்களிலும் ஓய்வூதியர்கள் தங்களின் ஓய்வூதிய கொடுவை எண் (பிபிஓ) குறிப்பிட்டு ஓய்வூதியம் பெரும் கருவூலத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment