Title of the document

பொலிவு பெறும் அரசு பள்ளி: மாணவர் சேர்க்கை அதிகரிக்க முயற்சி

*அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக, பொலிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது*

*தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் ஆண்டுக்கு ஆண்டு வீழ்ச்சி அடைந்து வந்தது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளிகளிலும் வசதிகள் செய்து தரப்படுகின்றன*

*மாணவ, மாணவியருக்கு கல்வி உதவி பொருட்கள் வழங்கப்படுகின்றன. அதனால், வரும் கல்வியாண்டு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது*

*பள்ளி கல்வி துறை உத்தரவுப்படி, இப்போதே மாணவர் சேர்க்கை துவங்கி விட்டது.வழக்கமாக, மாணவர் சேர்க்கைக்கு முன், பெற்றோரை கவர, தனியார் பள்ளிகள் வர்ணம் அடித்து பொலிவூட்டப்படும்*

*இதே பாணியை தற்போது அரசு பள்ளிகளும் கடைபிடிப்பது, பள்ளி மற்றும் சுற்றுச்சுவர்களில் ஓவியம் வரையப்படுகிறது*

*வரும் கல்வியாண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரிக்கும் என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்*

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post