கலை-அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்

Join Our KalviNews Telegram Group - Click Here
9092837307 - Add This Number In Your Whatsapp Groups - 9092837307

கலை-அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில்  கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்

*தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 2019-2020- ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கையின் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா வெளியிட்டுள்ளார்*

*அதில் கூறியிருப்பதாவது*

*தமிழகத்தில்  உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலைப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு பிளஸ் 2  மதிப்பெண்களையே அடிப்படையாகக் கொள்ள வேண்டும். அதன் அடிப்படையிலேயே கலந்தாய்வு நடத்தப்படும்*

*அரசு உதவி பெறும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் மற்றும் சுயநிதிக் கல்லூரிகள், தரவரிசைப் பட்டியலை அந்தப் பாடப் பிரிவுக்கு ஏற்ப 400 மதிப்பெண்களுக்குத் தயார் செய்ய வேண்டும்*

*கடந்த 2018-2019-ஆம் கல்வி ஆண்டுக்கு முன்னர் படித்த மாணவர்களுக்கு 800 மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்பட்டு, அது 400 மதிப்பெண்களாக மாற்றம் செய்து தர வரிசைப் பட்டியல் தயார் செய்ய வேண்டும்*

*மேலும் கணிதம், இயற்பியல், வேதியியல், புள்ளியியல் பாடப் பிரிவுகளில் சேர கட்டாயம் கணிதப் பாடம் படித்திருக்க வேண்டும்.  வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரி வேதியியல் பாடப்பிரிவுகளில் சேர வேதியியல் பாடம் கட்டாயமாகும்*

*எலக்ட்ரானிக் அடிப்படையான பாடப் பிரிவுகளில் சேர இயற்பியல், கணக்குப் பாடம் அவசியம்*

*தமிழ், ஆங்கிலம் தவிர பிற பாடங்களில் பெறப்படும் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது*

Post a Comment

0 Comments