பிளஸ் 2 மறுமதிப்பீடு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
*பிளஸ் 2 தேர்வுத் தாள் மறுமதிப்பீட்டுக்கு திங்கள்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத் துறை தெரிவித்துள்ளது*
*பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 19-ஆம் தேதி வெளியானது*
*இதில் மாணவர்கள் அல்லது தனி தேர்வர்கள், தங்களுக்கு மதிப்பெண்கள் குறைந்து விட்டதாகக் கருதினால் விடைத்தாளை மறுமதிப்பீடு செய்யவும், மறுகூட்டல் செய்யவும் வழிகாட்டுதலை, அரசு தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ளார்*
*விடைத்தாள் நகல் பெற ஒவ்வொரு பாடத்துக்கும் கட்டணமாக ரூ. 275 செலுத்த வேண்டும்*
*மறுகூட்டல் செய்ய விரும்புவோர், உயிரியல் பாடத்துக்கு மட்டும் ரூ.305, மற்ற பாடங்களுக்கு தலா ரூ. 205 செலுத்த வேண்டும்*
*மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனி தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும் திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை மூன்று நாள்களுக்குள் விண்ணப்பிக்கலாம்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment