வாக்குச்சாவடி அலுவலர் பயிற்சி முகாமில் பங்கேற்ற ஆசிரியை மாரடைப்பால் மரணம்

Join Our KalviNews Telegram Group - Click Here
9092837307 - Add This Number In Your Whatsapp Groups - 9092837307

வாக்குச்சாவடி அலுவலர் பயிற்சி முகாமில் பங்கேற்ற ஆசிரியை மாரடைப்பால் மரணம்

*சேலத்தில் வாக்குச்சாவடி அலுவலர் பயிற்சி முகாமில் பங்கேற்ற அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்*

*சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்தில் உள்ள தேவனூர் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தவர் நித்யா (35). இவரது கணவர் வடிவேல்*

*மக்களவைத் தேர்தலில் ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் மின்னாம்பள்ளியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தப் பயிற்சியில் ஆசிரியை நித்யாவும் கலந்து கொண்டார்*

*ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மயக்கம் வருவதாகக் கூறிய நித்யாவை சக ஆசிரியர்கள் அருகில் உள்ள காரிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்*

*அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், நித்யா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பயிற்சி முகாமில் ஆசிரியை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இச் சம்பவம் தொடர்பாக காரிப்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்*

Post a Comment

0 Comments