Title of the document


  விழுப்புரத்தில், நேற்று நடந்த தபால் ஓட்டுகள் பதிவின்போது, 'ஓட்டுகளை இங்கேயே, இப்போதே போட வேண்டும்' என, தேர்தல் அலுவலர்கள் வற்புறுத்தியதால், அரசு அலுவலர்கள், கடும்வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஓட்டுச் சீட்டுகளுடன் வெளியேறினர். விழுப்புரம் லோக்சபா தொகுதியில், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, இரண்டாம் கட்ட பயிற்சி, விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில், நேற்று காலை துவங்கியது.எச்சரிக்கைபயிற்சியில் பங்கேற்ற வர்களுக்கு, பிற்பகல், 3:௦௦ மணிக்கு, சட்டசபை தொகுதிகள் வாரியாக, தபால் ஓட்டுப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தபால் ஓட்டு சீட்டு களை பெற்ற, பெரும்பாலான அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வெளியேறினர்.
இதையறிந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான, ஆர்.டி.ஓ., குமர வேல், ''தபால் ஓட்டு களை இங்கேயே, இப்போதே போட வேண்டும். வெளியே கொண்டு செல்லக்கூடாது. மீறி எடுத்துச் சென்றால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, எச்சரித்தார்.ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், 'தபால் ஓட்டுகளை அவரவர் பகுதியில், அவரவர் விருப்பத்திற்கு பதிவு செய்வது தான் வழக்கம். தபால் ஓட்டுகளை, எங்கள் பகுதிகளில் பதிவு செய்து கொள்கிறோம்.'தபால் ஓட்டு போட, புதிய விதிமுறைகளை விதிக்கிறீர்கள். அதற்கு கட்டுப்பட மாட்டோம்' எனக் கூறி, ஓட்டு சீட்டு களுடன் வெளியேற முயன்றனர்.உரிமை மீறல்ஆர்.டி.ஓ., குமரவேல், ''தபால் ஓட்டுக்கான படிவங்களை பெற்ற யாரும், அதை வெளியே எடுத்துச் செல்லக்கூடாது. தபால் ஓட்டுப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் இங்கு தயாராக உள்ளது.''நீங்கள் படிவம் பெற்றது அனைத்தும், கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மீறி செயல்பட்டால், உங்கள் மீது தேர்தல் ஆணையம் மூலமாக, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மீண்டும் எச்சரித்தார்.'தபால் ஓட்டு போடுவது எங்கள் உரிமை. ஓட்டு எண்ணிக்கைக்கான முதல் நாள் வரை, எங்களின் ஓட்டுகளை பதிவு செய்ய, அவகாசம் உள்ள நிலையில், தபால் ஓட்டுகளை இப்போதே பதிவு செய்ய வேண்டும் என, வற்புறுத்துவது உரிமை மீறலாகும்' எனக் கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின், தபால் ஓட்டு போடும் பணி துவங்கிய நிலையில், கட்டுப்பாடு ஏதுமின்றி, கும்பல், கும்பலாக உள்ளே நுழைவதும், வெளிப்படையாகவே, அனைவரும் ஓட்டுகளை பதிவு செய்வதுமாக இருந்தனர்.அவர்களை ஒழுங்குபடுத்த, போதிய போலீஸ் பாதுகாப்போ, ஓட்டுப்பதிவிற்கான வழிகாட்டுதலோ இல்லாமல் இருந்தது. கடுப்பான ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பலர், தபால் ஓட்டு படிவங்களோடு வெளியேறினர்.கள்ளக்குறிச்சி கலாட்டாகள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி - தனி, சட்டசபை தொகுதியில், 1,602 பேர், தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.இவர்களுக்கான தபால் ஓட்டுப்பதிவு முகாம், ஏ.கே.டி., பள்ளி வளாகத்தில், நேற்று மதியம் நடந்தது.தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ஸ்ரீகாந்த் தலைமையில், ஓட்டுப்பதிவு ஏற்பாடுகள் நடந்தன. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள, 1,602 அரசு ஊழியர்களில், 792 பேருக்கு மட்டுமே தபால் ஓட்டுச்சீட்டு வந்துள்ளதாகவும், மற்ற, 810 பேர், 13ம் தேதி வந்து ஓட்டுச்சீட்டு பெற்று, தபால் ஓட்டு போடலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதனால், ஆத்திரமடைந்த ஊழியர்கள், ஓட்டுப்பதிவு மைய வளாகத்தை முற்றுகையிட்டு, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அனுமதி தரவில்லைஅப்போது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓட்டுகளை திட்டமிட்டு புறக்கணிக்கிறீர்கள். 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வந்த அரசு ஊழியர்களுக்கு, ஓட்டு போட அனுமதி தரவில்லை.'மூன்று தேர்தல்களாக, இதே நிலை நீடிக்கிறது' எனக் கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அவர்களை, தேர்தல் அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.மாலை, 3:00 மணிக்கு பின், லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில், ஓட்டுச்சீட்டு கிடைக்கப் பெற்ற அரசு ஊழியர்கள், தபால் ஓட்டுகளை பதிவு செய்தனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post