பான் எண்ணுடன் ஆதார் எண்ணை செப்டம்பர் 30 வரை இணைக்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு

 

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மேலும் 6 மாதங்கள் அவகாசம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இன்றுடன் அவகாசம் முடியும் நிலையில் செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.