தேர்தல் பணி அலுவலர்களுக்கு குறைந்த ஊதியம்: தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் மனு

Join Our KalviNews Telegram Group - Click Here
Add This Number In Your Whatsapp Groups - 8608844408

தேர்தல் பணி அலுவலர்களுக்கு குறைந்த ஊதியம்: தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் மனு

*தேர்தலில் பணியாற்றிய வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக முதுகலை ஆசிரியர்கள் சங்கத்தினர் தலைமை தேர்தல் அதிகாரிக்கு மனு அனுப்பியுள்ளனர்*

*முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை*

*தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம், தேர்தல் மற்றும் பயிற்சி பணிக்கான உழைப்பூதியம் குறைத்து வழங்கப்பட்டது குறித்து கோரிக்கை விடுத்துள்ளோம்*

*நாடாளுமன்ற தேர்தலுக்காக அரசு ஊழியர்களுக்கு மார்ச் 31, ஏப்ரல் 7, 13, 17 ஆகிய 4 நாட்கள் பயிற்சியும், 18ம் தேதி தேர்தல் பணியும் வழங்கப்பட்டது*

*இதற்காக  ஒருநாள் ஊதியமாக ரூ.350 வீதம் 5 நாட்களுக்கு ரூ.1,750 வழங்கப்பட்டது. 17 மற்றும் 18 ஆகிய 2 நாட்களுக்கு சிற்றுண்டி செலவு ரூ.300 சேர்த்து மொத்தம் ரூ.2,050 வழங்க வேண்டும்*

*ஆனால், வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கு, தமிழகம் முழுவதும் ரூ.1,700 மட்டுமே உழைப்பூதியமாக வழங்கப்பட்டுள்ளது. ரூ.350 குறைவாக தரப்பட்டுள்ளது*

*இதேபோல், தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடியில் பணிபுரிந்த பிற அலுவலர்களுக்கும் குறைவாக ஊதியம் தரப்பட்டு உள்ளது*

*எனவே, இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து உரிய ஊதியம் கிடைக்க உத்தரவிடவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments