Title of the document
குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கொடுக்கும் கல்வி என்பது மிகப்பெரிய சொத்து என காவல் துறை கூடுதல் இயக்குநர் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.  கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அடுத்த கவுண்டர்மில்ஸ் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.   இதில் சிறப்பு விருந்தினராக காவல்துறை கூடுதல் இயக்குநர் சைலேந்திர பாபு கலந்து கொண்டார்.    அப்போது பேசிய அவர், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வழங்கும் முதல் சொத்து கல்வி என்று கூறினார்.    இன்னோருவரை போல் போலியாக இருக்க தேவையில்லை என கூறிய அவர், தனித்திறமையை வெளிபடுத்தினால் இந்த உலகம் மதிக்கும் என்று பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எடுத்து கூற வேண்டுமென்று அறிவுறுத்தினார்.    இவ்விழாவில் மாணவ, மாணவிகளுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post